Aran Sei

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

Image Credits: DNA India

க்ஸ்போர்ட் மற்றும் பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரமதர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்தியாவை கொரோனா இல்லாத ஆரோக்கியமான பாதைக்குத் திரும்பச் செய்யும் வகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக்கின் அவசர கால தடுப்பூசி பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது ஒரு முக்கிய திருப்புமுனை. இதை இந்தியா பெருமிதமாகக் கொண்டாடும். இந்த மருந்து உருவாக்கும் பணியில் அல்லும் பகலும் அயராது உழைப்பில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வறிஞர்களுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

“அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்! ஆத்மனிர்பர் பாரதத்தின் கனவை நிறைவேற்ற நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தை இது காட்டுகிறது” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

“மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கொரோனா முன்கள வீரர்களுக்கும் நன்றியை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். நாட்டு மக்கள் பலரது உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனவும் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து அரண்செய்யுடன் பேசிய மருத்துவர் எழிலன், “தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் அதன் மூல முன் மாதிரி பன்னாட்டு நிறுவனங்களின் தொடர்புடன் தான் செய்யப்படும். வெளி நாடுகளில் இருந்து மருந்துகளை தயாரிப்பதற்கான 80 விழுக்காடு மூல பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். இது தான் காலகாலமாக நடைபெறுகிறது” என்று கூறினார்.

‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி

“வழக்கம் போல் மோடி இதையும் தனது சாதனையாகவே அறிவித்துக்கொள்கிறார். ஆனால் முழுதும் இந்தியாவில் தயாராகிருந்தால் இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாராகும் ஒன்று எனக் கருதலாம். இது அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஒன்றல்ல” எனவும்  மருத்துவர் எழிலன் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்