Aran Sei

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள்- தடுப்பூசிகள் குறைந்த அளவிலேயே செயலாற்றுமென வல்லுநர்கள் எச்சரிக்கை

ண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரிவெர்ஸ் ஜூநோஸ் எனப்படும் சங்கிலித் தொடர் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது- பூவுலகின் நண்பர்கள்

கடந்த மே 26 அன்று, அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்ளுக்கு கொரோனா அறிகுறி தென்பட நடத்தப்பட்ட ஆய்வில் 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்குத் தொற்று உறுதிபடுத்தப்பட்டது. மேலும், 9 வயது பெண் சிங்கம் ஒன்றும் உயிரிழந்தது.

இந்நிலையில், ரிவெர்ஸ் ஜூநோஸ் எனப்படும் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவிய கொரோனா தொற்று நோயானது, மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவி பின்னர் மீண்டும் பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுக்கூடிய அபாயம் உள்ளதாக “என்விரான்மென்டல் கெமிஸ்டரி லெட்டர்” என்ற ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் செய்தி கூறுகிறது.

‘சட்டவிதிகளை மீறி கட்டிடம் கட்டிய ஈஷா மையம்’ – விதிமீறல் ஆவணங்களை வெளியிட்ட பூவுலகின் நண்பர்கள்

அந்த ஆய்வுக்கட்டுரையில், “மனிதர்களால் 21 பாக்டீரியா, 12 வைரஸ், 7 பூஞ்சைக் கிருமிகளை விலங்குகளுக்கு கடத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

மேலும், இந்த ஜூநோஸ் தொற்று ஏற்படுவதற்கு, இயற்கையாக அமைந்துள்ள வாழ்விடங்களை மனித பயன்பாட்டிற்காக அழிப்பது, மனித செயல்பாடுகள் ஆகியவற்றினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நோய்க்கிருமிகளைக் கொண்ட விலங்குகளின் இடப் பெயர்வால் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுவதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இது போன்ற மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குத் தொற்று பரவும் சம்பவங்கள் குறிப்பாக ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இட்டவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சிறப்பு செயலர்(வனம்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

‘பெல், எண்ணூர் ஆலைகள் இருக்க, வேதாந்தாவிற்கு மட்டும் அனுமதி என்பது மக்கள் விரோதம்’ – பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

எனவே, விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சங்கிலித் தொடர் சுழற்சியாக மாறி பரவல் தொடங்கி விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென துறை சார் அறிஞர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ரிவெர்ஸ் ஜூநோஸ் ஒரு சுழற்சியாக மாறுகையில் மரபணு மாற்றம் பெற்ற உருமாறிய வைரசை எதிர்த்துத் தடுப்பூசிகள் குறைந்த அளவிலேயே செயலாற்றும் என என்விரான்மென்டல் கெமிஸ்டரி லெட்டர் ஆய்விதழ் ஆய்வுக்கட்டுரையில் எச்சரித்துள்ளதையும் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

source:சதீஷ் லெட்சுமணன், “பெண் சிங்கம் நீலாவின் மரணமும் ‘Reverse Zoonoses’ அபாயமும்” கட்டுரை 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்