Aran Sei

‘டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’ – பிரதமர் உரையை பகடி செய்த ராகுல்காந்தி

டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’ என பிரதமரின் டாவோஸ் மாநாட்டு உரையைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகடி செய்துள்ளார்.

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று இணையவழியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் தயங்கித் திணறினார். அந்த காணொளியைக் பகிர்ந்து ”டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை’” என்று ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவு செய்வது குற்றமா? இல்லையா? – ஒன்றிய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

“பிரதமர் மோடியால் டெலிப்ராம்டர் இல்லாமல் பேசவே முடியாது என்று நான் முன்னடியே சொன்னேன். ‘டெலிப்ராம்ப்டரால் கூட நிறைய பொய்களை ஏற்க முடியவில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் டெலிப்ராம்ப்டர் கோளாறு ஏற்பட்டது தொடர்பான கருத்து ட்விட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்