Aran Sei

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றப்பட்டு குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டம் இயற்ற வேண்டும் – வேளாண் சங்கங்கள் வேண்டுகோள்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டால் மட்டுமே, விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்வார்களென பாரதீய கிஷன் சங்கத்தின் பொதுச்செயலாளர் யுத்விர் சிங்  தெரிவித்துள்ளதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமென ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரி இருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்காமல் விவசாய சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா

மேலும், இதுகுறித்து குறித்து தெரிவித்துள்ள யுத்விர் சிங், “அரசு குறைந்தபட்ச ஆதார விலைக் குறித்து பேசாமல் சட்டத்திருத்தம் குறித்தே பேசுகிறது. இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. மேலும், குறைந்தபட்ச ஆதார விலைக் குறித்து சட்டம் இயற்ற வேண்டும்” என்று கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய கிஷன் மஸ்தூர் மஹாசங் தலைவர் சிவ குமார் காக்கா, “நாங்கள் ஏறத்தாழ 600 விவசாயிகளை இழந்துள்ளோம். அரசு எங்களை போராட்டத்தை கைவிட கோரியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் நடந்துள்ள ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க தயார் – ஆம் ஆத்மி எம்.பி ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கடிதம்

விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளது. கடைசியாகக் கடந்த ஜனவரி 22 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்