Aran Sei

இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்துள்ளது கவலையளிக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

இந்தியாவில் மனிதஉரிமை மோசமடைந்து வரும் சூழல் கவலையளிப்பதாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு போர்ச்சுக்கலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழலில் இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்வது குறித்து, அந்நாட்டின் வெளியுறவுத்துறை குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அதில் இந்தியாவில் மனிதஉரிமை மோசமடைந்து வரும் சூழல் குறித்தும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

போபாலில் சிறை கைதிகளை என்கவுண்டர் செய்த சிறை நிர்வாகம் – நடவடிக்கை எடுக்காதது குறித்து பதிலளிக்க மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவு

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கைக்கு ஆதரவாக 61 பேரும் எதிராக 6 பெரும் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், வருகின்ற மே 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு போர்ச்சுக்கல் செல்ல உள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இரு நாட்டு உறவுகளை வளர்ப்பது குறித்து, பன்னாட்டு பாதுகாப்பு, உலகப் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகள், பன்முக உறவுகளை வளர்த்தல் போன்றவற்றை குறித்து சமர்பிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டான் ஸ்வாமிக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – 2500 சமூக செயல்பாட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம்

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ள அந்தக் குழுவின் உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளவையின் மனித உரிமை ஆணையர் மற்றும் ஐக்கிய நாடுகளவையின் சிறப்புப் பிரதிநிதிகள் இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்தை மேற்கோளிட்டு கவலை அளிப்பதாக உள்ளது  தெரிவித்துள்ளார்கள் என்று தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , “மனித உரிமை செயல்பாட்டளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தியாவில் பணியிட பாதுகாப்பு இல்லை. இதேபோலப் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அசாதாரண சூழல் நிலவுகிறது என்றும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாகக் கூறப்பட்ட நிலையில் மனித உரிமை செயல்பாட்டு அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தனது அலுவலகத்தை மூடியுள்ளதையும் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிரான தீண்டாமை போக்கையும், பிளவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஐ.நா. அவையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகிறது

மேலும், காஷ்மீர் விவகாரம்குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உற்றுநோக்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்