Aran Sei

கொரோனா தடுப்பு மருந்துக்கு அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்கம் – முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம்

கொரோனா தடுப்பு மருந்துக்கு அறிவுசார் சொத்துரிமை விதிக்கப்படுவதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கும் கூட்டத்தொடரில் முன்மொழியப்படவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஜூன் 7 முதல் 10 வரை நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இதுகுறித்து முன்மொழியப்படவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

கொரோனா தடுப்பு மருந்துமீதான காப்புரிமைக்கு விலக்கு- அமெரிக்காவை தொடர்ந்து ஜரோப்பிய ஓன்றியம் ஆதரவு

கடந்த ஆண்டு அக்டோபர் அன்று இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா உலக வர்த்தக குழுமத்திடம் கொரோனா தடுப்பு மருந்துக்கு அறிவுசார் சொத்துரிமை விதிக்கப்படுவதில் இருந்து விலக்களிக்கப் படவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா அரசு ஆதரவளித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறையில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிபிஜே கடிதம்

மேலும், இதுகுறித்து கடந்த மார்ச் 8 அன்று நடந்த இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போதும் விவாதிக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுல வான் டெர், இது ஒரு முக்கியமான விஷயம், இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்