Aran Sei

ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர்: விசாரணைக்காக ராஜினாமா செய்தார்

ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் எஸ்டோனியா நாட்டின் பிரதமர் பிரதமர் ஜுரி ரிடாஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தன் மீது விசாரணை நடந்து வருவதால் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் எஸ்டோனியா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜுரி ரடாஸ் எஸ்டோனியாவின் டாலின் நகரத்தின் வளர்ச்சி திட்டத்தில் ஊழல் செய்ததாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர்கள் “நகரத்தில் ஒரு சாலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு நகராட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக கட் 1 மில்லியன் யூரோக்களை பிரதமர் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

பிரதமர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிப்பதற்கு அவருடைய கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர் ராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்துள்ளார்.

2ஜி-க்கு இணையான ஊழல் – தமிழக பாஜகவை பாதிக்கும்- சுப்பிரமணியன்சாமி கருத்து

இது தொடர்பாக அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும், இது (பதவி விலகுவது) தான் சரியான அனுகுமுறை” என்று தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/ratasjuri/posts/1862020567269227

இந்த ஊழல் குற்றச்சாட்டை தீர்க்கமாக விசாரிப்பதற்கு இடையூறாக தான் தடையாக இருக்க கூடாது என்பதனால் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

”அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போதிலும், பிரதமராக நான் எந்தத் தவறான முடிவுகளை எடுக்கவில்லை என்று முழு மனதுடன் சொல்ல முடியும்” என்றும் ஜுலி ரடாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஊழல் புகாருக்கு ஆளானவர் எதிர்கட்சித் தலைவரா? – தேஜஸ்விக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

2016-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற ஜுரி ரடாஸ் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையைக் கைப்பற்றவில்லை. பின்னர் மூன்று கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பொறுப்பேற்ற அவர் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

செய்தித் தரவு: ராய்டர்ஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்