Aran Sei

‘சட்டவிதிகளை மீறி கட்டிடம் கட்டிய ஈஷா மையம்’ – விதிமீறல் ஆவணங்களை வெளியிட்ட பூவுலகின் நண்பர்கள்

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறாமலே ஈஷா மையம் தனது கட்டிடங்களைக் கட்டியுள்ளது குறித்த ஆவணங்களைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆவணங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு, “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின்”(SIEAA) சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், EIA 2006 சட்டத்தை மீறி நாங்களே எங்கள் கட்டிடங்களை கட்டிவிட்டோம். அதனால் அனுமதி வாங்குவதற்கு தேவைப்படும் ஆய்வு எல்லைகளை (TOR)வரையறுத்துத் தாருங்கள்”என @ishafoundation நிறுவனம் அனுப்பிய கடிதம்” என்று ஈஷா மையத்தின் கடிதத்தையும் இணைத்துப் பதிவிட்டுள்ளது.

மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது- பூவுலகின் நண்பர்கள்

மேலும், இந்த கடிதத்தைப் பரிசீலித்த எஸ்.ஐ.இ.எ.எ ஆணையம்குறித்து தெரிவித்துள்ள அந்த அமைப்பு,”இந்த விண்ணப்பத்தை 2020 மார்ச்சில் பரிசீலித்த SEIAA, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்ய ஆய்வு எல்லைகளை (ToR) மட்டுமே வழங்கியது. அதன் பின்னர் நடந்த கூட்டங்களில் ஈஷாவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக எந்த குறிப்பும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈஷா யோகா மையம், சுற்றுச்சூழல் அனுமதியே இல்லாமல் கட்டிடங்கள் எழுப்பி இயங்கி வருவது சட்ட விதிமீறல் இல்லையா ??? என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், இவ்வாறு சூழலியல் சட்டங்களை மீறி ஈஷா மையத்தில் அமைக்கப்பட்ட சிலையைத்தான் 2017 ல் பிரதமர் மோடி நேரில் திறந்து வைத்ததாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

‘பெல், எண்ணூர் ஆலைகள் இருக்க, வேதாந்தாவிற்கு மட்டும் அனுமதி என்பது மக்கள் விரோதம்’ – பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

ஈஷா மையம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடந்த ஏப்ரல் 12 2018 அன்று தேதியிட்டுஅனுப்பிய கடிதத்தில், மேற்கண்ட சர்வே எண்களில் (கடிதத்தில் உள்ளவை) உள்ள கட்டிடங்கள் சூற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2006 ன் சட்டவிதிகளை மீறி சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்