Aran Sei

ஈரோடு: பட்டியலின மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது

ரசுப்பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்ய, பட்டியலின மாணவர்களை பயன்படுத்திய விவகாரத்தில் தலைமை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சிக்குள்பட்ட பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள 2 கழிவறைகளையும் பட்டியலின மாணவர்களை வைத்து தூய்மைப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பெற்றோர்கள் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவர்களையும், பெற்றோரையும் நேரில் அழைத்து காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில், பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.

ஈரோடு: பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை இடைநீக்கம் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இதைத்தொடர்ந்து கீதாராணியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா இடைநீக்கம் செய்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கீதாராணி கைதும் செய்யப்பட்டார். அவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 301 (ஆர்), 310 (ஜே), 75, இந்திய தண்டனை சட்டம் 286 போன்ற 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்துகின்றனர்.

எந்த தொடக்கப்பள்ளியிலும் கழிவறையை சுத்தம் செய்ய தனியே ஆள்களை நியமனம் செய்யப்படாமல் இருப்பதும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட காரணமாக உள்ளதாக ஆசிரியர்கள் சிலர் புகார் கூறுகின்றனர். “கழிவறையை தூய்மைப்படுத்த ஆட்கள் இல்லை என்ற காரணத்துக்காக மாணவர்களை, குறிப்பாக பட்டியலின மாணவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவது குற்றச்செயல்” என்று ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கூறியுள்ளார்.

Pranay Roy Radhika Roy & Ravish kumar quits NDTV | Adani takes over NDTV Explained | Haseef | Deva

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்