Aran Sei

கொரோனா உயிரிழப்பை குறைத்துக் கூறிய மத்திய சுகாதார அமைச்சர் – பதவி விலக கோரும் அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர்

லகிலேயே இந்தியாவில் தான் கொரோனா உயிரிழப்புகள் குறைவு  என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தவறாக தெரிவித்துள்ளார். இதற்கு, ”நீங்கள் இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். தயவு செய்து பதவி விலகுங்கள்” என அமெரிக்க பொது சுகாதார விஞ்ஞானியும், தொற்றுநோயியல் நிபுணருமான எரிக் ஃபீகல் டிங் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், “உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா உயிரிழப்புகள் குறைவு. மக்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற முடியும் என்பதை நம்ப மறுக்கின்றனர். நேற்று இரண்டு லட்சத்திற்கு அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிய உருமாறிய கொரோனா தான் உயிரிழப்புகளுக்குக் காரணம்” என தெரிவித்திருந்தார்.

மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பு – உலகின் நான்கில் ஒரு கொரோனா உயிரிழப்பு இந்தியாவில்

”மத்திய சுகாதாரத்துறை அதிகார்ப்பூர்வ அறிக்கையின்படி இந்தியாவில் தான் உலகிலேயே உயிரிழப்புகள் அதிகம். தொடந்து மூன்று நாட்களாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்” என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரசின் தகவலுக்கு முரணாக அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபீகல் டிங் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசிய காணொளியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எரிக், ”நீங்கள் இந்தியாவின் சுகாதார அமைச்சராக இருக்க தகுதியற்றவர். தயவு செய்து பதவி விலகுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

 

மேலும், ”இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளுக்கு உருமாறிய கொரோனா மட்டும் காரணமல்ல, மோடி அரசு பல லட்சகணக்கான மக்களை மத வழிபாடு மற்றும் அரசியல் பேரணிகளுக்காக ஒரே இடத்தில் கூட அனுமதித்தது தான் காரணம்” என ரோமின் பாம்பினோ கெஸ் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்பு நோயறிதலின் தலைவரான கார்லோ ஃபெடரிகோ பெர்னோ தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்