பணவீக்க அழுத்தங்களை குறைக்க வருவாய் இழப்பு ஏற்படாமல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை 45 விழுக்காடு வரை ஒன்றிய அரசால் குறைக்க முடியும் என முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.சி.ஆர்.ஏ) தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாட்டில் நுகர்வோர் உணர்வுகளை பாதித்துள்ளது. சில்லரை எரிபொருளின் விலை, மக்கள் ‘செலவழிக்கக்கூடிய வருமானங்கள் மற்றும் நுகர்வுகள்’ மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மே மாதத்தின் சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு வரம்பான 6.3 விழுக்காட்டை கடந்துள்ளது.
எரிபொருள் வரிகுறைப்பால் ஏற்படும் இழப்புகளை, எரிபொருள் நுகர்வு அதிகரிப்பால் ஈடுசெய்ய முடியும் என்றும், இது ஒரு வருவாய் நடுநிலை நடவடிக்கையாக இருக்கும் என்றும் ஐ.சி.ஆர்.ஏ அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் அதிதி நாயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருட்களின் வருவாய் இந்த அண்டு ரூ. 40 ஆயிரம் கோடி அதிகரித்து, மொத்த வருவாய் ரூ. 3.6 லட்சம் கோடியாக இருக்கும். இந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் விலை குறைப்பிற்கு பயன்படுத்தினால் லிட்டருக்கு ரூ. 4.5 வரை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்
”இந்த செஸ் வரி குறைப்பு, மக்களின் வீட்டு வரவு செலவுகளுக்கு சில நிவாரணம் அளிக்கும் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தை குறைக்க உதவும். மேலும், இது ரிசர்வ் வங்கிக்கு பணவீக்கம் குறித்து கவலைப்படுவதற்கு பதிலாக, வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த அதிக இடமளிக்கும்” என அதிதி குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் பிப்ரவரியில் இருந்து நடைபெற்ற மூன்று நாணயக் கொள்கைக் குழு கூட்டத்திலும், கடந்த ஆண்டு ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் உயர்த்திய மதிப்புக் கூட்டு வரி மற்றும் செஸ் வரி விகிதங்களால், ஏற்பட்டுள்ள பணவீக்க மற்றும் செலவு அழுத்தங்களை குறைக்க, வரிகளை தளர்த்துவது குறித்து தெரிவிக்கப்பட்டதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வாழப்பாடி முருகேசன் படுகொலை; தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் – அ.மார்க்ஸ்
கடந்த ஜனவரியிலிருந்து உலக பொருளாதாரம் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில், உலகளாவிய கச்சா எண்ணெய் ஏற்றத்தில் இருக்கும்போது, பலவீனமான ரூபாய் மதிப்பு, கடந்த ஆண்டு மார்ச் முதல் ஒன்றிய அரசு உயர்த்தி இருக்கும் செஸ் வரி மற்றும் மாநில அரசுகள் உயர்த்தியிருக்கும் நான்கில் மூன்று பங்கிற்கு அதிகமான மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றால் இந்தியாவில் சில்லரை எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருப்பதாக, ஐ.சி.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.