Aran Sei

கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: புதிய கல்வி கொள்கையை அமல் படுத்தும் மத்திய அரசு

credits : the indian express

ருகின்ற காலங்களில், உயர்கல்வி (கல்லூரி படிப்பு) சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அனைத்து இந்திய தொழிற்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அனில் சகஸ்ரபுத்தே, வெளிநாடுகளுக்கு மேற்படிப்பு படிக்கச் செல்லும் மாணவர்களின் தரத்தை மதிப்பிடும் தேர்வுகள் ( எஸ்ஏடி மற்றும் ஜிஆர்இ ) போன்றே,  இந்தியாவிலும் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொறியியல் (ஜேஇஇ – தேசிய பல்கலைக்கழகங்கள்) மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை தன்னுடைய எல்லையை விரிவுப்படுத்தி வருவதாக கூறியுள்ள அவர், ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு (Courses) மாணவர் தகுதியானவரா என்பதை ஆய்வு செய்வது அடுத்த கட்டத்துக்கான நகர்வு என்று கூறியுள்ளார்.

சித்தா, யுனானி, செவிலியர் கல்வி படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்க – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

”நமது நாட்டில். பொறியியல், மருந்தகம் (Pharmacy), கலை(Art)  என எந்தத் துறையாக இருந்தாலும், அந்தத் துறையைப் பற்றி மாணவர்கள் முழுவதுமாக புரிந்துக் கொண்டுள்ளார்களா என்பதை நுழைவு தேர்வின் மூலம் கண்டறிய வேண்டும் என்கிற நிலையை நோக்கி நாம் மெல்ல நகர வேண்டும். இது போன்ற மாணவர்கள் தான் அந்தத் துறைகளில் சாதனையைப் புரிவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

புதிய கல்வி கொள்கை அமலாக இருக்கும் சூழலை மனதில் வைத்து தான் இது போன்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இந்திய தொழிற்நுட்ப கவுன்சில் புதிதாக 14 பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அனில் கூறியுள்ளார்.

புதுச்சேரி : நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு

”மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான  நுழைவுத் தேர்வுகள் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியலில் ஒரு மாணவரின் தகுதியைச் சோதித்தன. அதேசமயம் பல மாநில வாரியங்கள் (State Board) மற்றும் தேசிய கல்வி நிறுவனங்கள், பல முக்கியமான பொறியியல் பாடத்திட்டங்களை ( செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், பொறியியல் அறிவியல், கிராபிக்ஸ்) பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு : ஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர்

“தேர்வில் தேர்ச்ச்சி பெரும் மாணவர்கள் மட்டுமே முக்கியமான பொறியியல் படிப்புகளுகளுக்கு பரிசீலிக்கப்படலாம். இந்த மாணவர்களாலும், இது போன்ற கடினமான பாடத்திட்டத்தை படிக்க முடியவில்லை எனில், படிப்பை நிறுத்திக் கொள்ளலாம்” எனவும் அனைத்து இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்