Aran Sei

பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு; சமூக நீதியை சிதைக்கும் செயல் – ஒன்றிய அரசுக்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

ட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவருவது சமூகநீதியை சிதைக்கும் செயல் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும்  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுள்ளஅறிக்கையில், இந்தியாவில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு, பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நுழைவுத் தேர்வை, தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தவும், மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் உள்ள அனைத்துக் கேள்விகளும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கவும் யுஜிசி முடிவு செய்துள்ளது.

ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்

மேலும் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு முறையைப் பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக்கலாம் என்றும் பிற தனியார் அரசு கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

ஒன்றிய அரசின் இம்முயற்சி சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும். ஏற்கனவே நீட் தேர்வின் மூலமாக பாமர மக்களின் மருத்துவக் கனவை சிதைத்துள்ள ஒன்றிய அரசு தற்போது பட்டப் படிப்புகள் பயிலவும் மறைமுகமாகத் தடையை ஏற்படுத்தி உள்ளது. கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் கல்விக் கனவைப் பாழாக்கும் செயலில் யுஜிசி துணையோடு ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. இது மறைமுகமான நவீன குலக் கல்வித் திட்டத்தின் வெளிப்பாடு.

சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் இச்செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படுவது இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

எந்த நுழைவுத் தேர்வும் இல்லாமல் தமிழ்நாட்டில் தரமான உயர்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உலகத் தரத்தில் உள்ளது.

ஆனால் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து தமிழக மாணவர்கள் பெரிய அளவில் உயர்கல்வியில் சேர்ந்து பயில்வதை சிதைத்து அவர்களை உயர்கல்வியைக் கற்க முடியாத நிலைக்குக் கொண்டுவரவே இந்த நுழைவுத் தேர்வு நடவடிக்கை.

எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் பயில நுழைவு¢த் தேர்வு கட்டாயம் என்பதை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும்  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்