Aran Sei

நாகாலாந்தில் குடியரசு தின விழாவைப் புறக்கணித்த சிவில் சமூக அமைப்பு – பாதுப்படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்காக தொடரும் போராட்டம்

நாகாலாந்தில் உள்ள சிவில் சமூக குழுவான கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பானது, பொதுமக்கள் பதினான்கு பேரின் மரணத்திற்கு காரணமான பாதுகாப்புப் படையினர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், கிழக்கு நாகாலாந்து பகுதிகளில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்பது மோன், கிஃபிர், டுயென்சாங், பெக், நோக்லாக் மற்றும் லாங்லெங் ஆகிய ஆறு கிழக்கு நாகாலாந்து மாவட்டங்களில் உள்ள முக்கிய சிவில் சமூக அமைப்பாகும்.

குடியரசு தின விழா புறக்கணிப்பு தொடர்பாக, கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு எழுதியுள்ள  கடிதத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, லாங்லெங்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று அனைத்து கிழக்கு நாகாலாந்து சிவில் சமூகங்களின்  ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒத்துழையாமை தீர்மானம் நினைவூட்டப்பட்டுள்ளது.

அதிகாரத்திற்கு எதிராக சமர் புரியும் நாகாலாந்து மக்கள் – பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி நடைபயணம்

அதன்படி, குடியரசு தின விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் அப்பாவி பொதுமக்களின் படுகொலைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உட்பட நாகா மக்கள் அனைவரும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, எந்தவொரு தேசிய கொண்டாட்டங்கள் அல்லது அரசின் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதென முடிவு செய்யப்பட்டது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, துப்பாக்கிச் சூடு நடந்த மோன் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எந்த அமைச்சரையும் அல்லது சட்டப்பேரவை உறுப்பினரையும் மாநில அரசு பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்