Aran Sei

எண்ணூர் வரைபட மோசடி – ரியல் எஸ்டேட் நிலமான ஏரி

சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (டி.வி.ஏ.சி), திங்களன்று நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, பாண்டியனின் வீட்டில் நடத்திய சோதனையில், 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 3.08 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்பிலான 3.34 கிலோ வெள்ளி, 5.4 லட்ச ரூபாய் மதிப்பிலான 10.52 காரட் வைரம் கைபற்றப்பட்டது. மேலும், ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பத்திரங்கள் பதினெட்டும், 37 லட்ச ரூபாய் வைப்பு நிதிக்கான ஆவணமும், 1.37 கோடி ரூபாய் பணமும், டொயோட்டா சீடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய அலுவலகத்தில் நடந்த சோதனையில், 88,500 ரூபாயும், வங்கிக் கணக்கில் 38.66 லட்சம் ரூபாய் இருந்ததும் ஊழல் தடுத்துப் துறையால் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

‘பாஜக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியா?’ – திமுக கேள்வி

இதைத் தொடர்ந்து, சுற்றுச் சூழல் அமைப்புகளின் உறுப்பினர்களும், கல்வியாளர்களும், மீனவ மக்களும், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், ஒன்றாக இணைந்து, பாண்டியனின் பிற மோசடிகளும் விசாரிக்கப்பட வேண்டுமென ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். 

அக்கடிதத்தில், “எண்ணூர் சதுப்புநிலப் பகுதிகள், மோசடியான கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை உருவாக்கி பயன்படுத்தியதில் பாண்டியனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 2017 ஜூன் மாதம் பாண்டியன் உருவாக்கிய வரைபடத்தில், கொசஸ்தலை ஆறு உட்பட்ட எண்ணூர் சதுப்புநிலத்தின் 15,000 ஏக்கர் மறைக்கப்பட்டு, அவை வெறும் நிலமாக மட்டுமே காட்டப்பட்டிருந்தன.  இப்படி மோசடி செய்து, சதுப்புநிலப்பகுதிகளையும், காட்டுப்பள்ளி தீவையும் ரியல் எஸ்டேட் பகுதிகளாக மாற்றுவதற்கு உதவியிருக்கிறார்” என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் கையில் சந்தை – காலனியச் சூழலை உருவாக்கும்

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம்  அரண் செய்  பேசிய போது,  “இத்தனை கோடி பணம் சேர்த்திருக்கிறார் என்றால், அவரிடம் இருந்து ஒரு பலனை எதிர்பார்த்துக் கொடுக்கப்பட்ட பணமாகத்தான் இருக்கும். நீரில் மூழ்கியிருக்கும் ஒரு பெரிய பனிப்பாறையின் முனை தான் பாண்டியன். கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தை உருவாக்க அரசின் அனுமதி வேண்டும். அது வாங்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது குறித்து விசாரித்த போது, அனுமதி கேட்கப்படவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது” என்று கூறினார். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்