சென்னை ஐஐடி வளாகத்திற்குள் 22 வயதான பொறியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திட்ட உதவியாளராக பணிபுரிந்த அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
”உயிரிழந்த நபரின் பெயர் உன்னிகிருஷ்ணன். அவர் சென்னை ஐஐடியில் ஒரு திட்டத்தில், இருந்துள்ளார். அதை அவரால் சமாளிக்க முடியவில்லை என குறிப்பை விட்டுச் சென்றுள்ளார்” என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
நீதிக்கான நீண்ட பயணம் – நிரபராதி என்று நிரூபிக்க 12 ஆண்டுகளை சிறையில் கழித்த காஷ்மீரி
உன்னிகிரிஷ்ணனின் உடல் ஐஐடியில் உள்ள ஹாக்கி மைதானத்திற்கு அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம்குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐஐடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நேற்று ஒரு துரதிருஷ்டமான மற்றும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் திட்ட ஊழியாரக சேர்ந்த தற்காலிக ஊழியரான உன்னிகிருஷ்ணன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இந்த தகவல் கேட்டு நாங்கள் அதிர்ச்சி மற்றும் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.