Aran Sei

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தில் 37 கோடி முறைக்கேடு – நான்கு அதிகாரிகள் இடை நீக்கம்

மும்பையில் உள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பல கோடி மதிப்பிலான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி முறைக்கேடாக எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை மண்டல அலுவலகத்தில் இருந்து 37 கோடி மதிப்பிலான பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இம்முறைகேட்டிற்கு அந்த அலுவலகத்தில் பணிப்புரியும் அதிகாரிகள் உதவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நான்கு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு மார்ச் மாதம், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை தொடங்கி, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் கீழ், வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின்படி, தொழிலாளர் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து மூன்று மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 விழுக்காடு வைப்பு தொகையில், எது குறைவான தொகையோ அத்தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முறையாக விண்ணப்பித்து அத்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இதில், மும்பை காண்டிவலி அலுவலகத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்து, முறைகேடாக வருங்கால வைப்பு நிதி எடுக்கப்பட்டுள்ளது.

Source: The Hindu

தொடர்புடைய பதிவுகள்:

முன்னறிவிப்பின்றி தொழிற்சாலையை மூடிய நிர்வாகம் – நிலுவை தொகை கோரி போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்