Aran Sei

‘கோவில்களை விடுவிக்கச் சொல்வது முட்டாள்தனம்’ – ஈஷாவை வெளுக்கும் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள்

ந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களை விடுவிக்க சொல்வது ‘முட்டாள்தனமானது’ என தமிழக நிதியமைச்சரும் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ”சீரற்ற மனிதர்கள், சீரற்ற சத்தம் செய்கிறார்கள். இவர்கள் தான் சமூகத்தின் நல்லெண்ணத்தை உடைக்க விரும்புகிறவர்கள்” என தெரிவித்துள்ளார்.

“ஜக்கி ஒரு விளம்பர பேர்வழி மற்றும் பணம் சம்பாதிக்க மாற்று கோணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்” என்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்

”கடவுள் சேவை செய்வதாக கூறும் நபர் 5 ஆயிரம், 50 ஆயிரம், 50 லட்சம் என விலை நிர்ணயித்து, சிவராத்திரி டிக்கெட்கள் விற்பனை செய்வாரா?. இதுதான் கடவுளுக்குச் சேவை செய்யும் முறையா? இதுதான் ஆன்மீகவாதி என சொல்லிக் கொள்பவருக்கான அடையாளமா?. அவர் (ஜக்கி) கடவுள் மற்றும் மதத்தின் உதவியைக் கொண்டு வியாபாரம் செய்யும் வணிகர்” திஇந்து வுக்கு அளித்துள்ள பேட்டியில் நிதி அமைச்சர் ஜக்வி வாசுதேவை விமர்சித்துள்ளார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டும் என, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் – உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த தெய்வத்தமிழ்ப் பேரவை

இதுகுறித்து கருத்து தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், “ஈஷா யோகா மையத்தில் பிரச்னைகள் அல்லது விதிமீறல்கள் உள்ளதா என அமைச்சர் (சேகர்பாபு) விசாரிப்பார். சிஏஜி அறிக்கையில் அவர் சில பிரச்னைகளைக் காண்கிறார். அதில் அவர் கவனம் செலுத்துவார்” என கூறியுள்ளார்..

ஒரு கோயில் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்படும்போது, அதை ஒரு தனி நிறுவனமாகப் பதிவு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது என தியாகராஜன் சுட்டிக் காட்டியுள்ள நிதி அமைச்சர் “அந்த நிறுவனம் என்னவாக பதிவு செய்யப்படும்? …அது சில சட்ட கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும். யார் அதை ஒழுங்குபடுத்துவார்கள்? யார் அதைத் தணிக்கை செய்வார்கள்? நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களை நீங்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்? குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இறக்கும் வரை நிரந்தரமாக இருப்பார்களா? நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு யார் தகுதியானவர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் அடையாளம் ஜக்கியின் ஆதியோகி சிலையா? – விமான நிலையங்கள் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் கண்டனம்

முன்னதாக, மாநிலங்கள் வாரியாக தனிமைப்படுத்தல் வழிகாட்டு நெறிமுறைகள்குறித்து, இந்தியா விமான நிலையங்கள் ஆணையம் ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள் இடம் பெறுவதற்கு பதிலாக, ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை இடம் பெற்றிருந்தது.

இதற்குக் கண்டணம் தெரிவித்த மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள்குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். வன்மையான கண்டனம், உடனே மாற்று” என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட தமிழ்நாட்டிற்கான தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் இடம்பெற்றிருந்த ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை மாற்றப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம் வெளியிடப்பட்டது.

இதேபோல், கோவை மாவட்ட அரசு இணையளத்தில் இருந்த ஜக்கியன் ஈஷா மையம் தொடர்பான படங்களும் நீக்கப்பட்டன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்