தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடுமையான டயர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40% பேருந்துகளை தீப ஒளிக்கு இயக்க முடியாது என்று கூறப்படுவது உண்மையானால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், போதிய டயர்கள் இல்லாததால் அரசுப் பேருந்துகளில் ரீ-ட்ரெட் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தேய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது!
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள் வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே சிக்கலுக்குக் காரணம். உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.