Aran Sei

மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர தகுதித் தேர்வு – 12 வகுப்பு மதிப்பெண் போதாதென யுஜிசி தகவல்

த்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பனிரெண்டாம் வகுப்பு  மதிப்பெண் மட்டுமே போதாது சியுஇடி (CUET, The Common University Entrance Test) எனப்படும் பொதுப் பல்கலைக்கழகத் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் பனிரெண்டாம் வகுப்பு  NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று (21.3.2022) செய்தியாளர்களை சந்தித்த யுஜிசியின்  தலைவர் ஜெகதீஷ் குமார், 2022- 23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணாக்கர் சேர்க்கைக்கு தேசிய தேர்வுகள் முகமை (NTA, National Testing Agency) நுழைவுத் தேர்வு நடத்தும். இளநிலை, முதுநிலை படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். பகுதி 1A, பகுதி 1B, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு என நுழைவுத் தேர்வு வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

பகுதி 1Aவில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மொழிகள் இருக்கும். பகுதி 1B என்பது விருப்பத்தேர்வு தேர்வு. பிற மொழிகளை கற்க விரும்பும் மாணவர்கள் இதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் கீழ் மாணவர்கள் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் போன்ற மொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.

குறிப்பிட்ட பாடவாரியான விருப்பத் தேர்வில் மாணவர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்யலாம். அதாவது அவர்கள் இளநிலையில் படிக்க விரும்பும் ஏதேனும் 6 பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில் வரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மத்திய பல்கலைக்கழகங்களில் சேர முடியும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பின்னடைவும் வராது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

பொதுப் பல்கலைக்கழகத் தகுதித் தேர்வால், அனைத்து கல்வி வாரியங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும், வடகிழக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சமவாய்ப்பு கிடைக்கும். சியுஇடி மத்திப்பெண்ணை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதுநிலை பட்டப்படிப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே நிறைய பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட முறையில் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. இனி அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுமே சியுஇடி நுழைவுத் தேர்வு முறையைப் பின்பற்றும் என நம்புகிறோம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் கூறியுள்ளார்.

Source: indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்