Aran Sei

‘இட ஒதுக்கீடு மெரிட் தகுதிக்கு எதிரானது அல்ல’ – மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

credits : the indian express

மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஜனவரி 7 அன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை மீண்டும் தொடங்கலாம், மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினரின் 10% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தகுதி என்பது சமூகச் சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு மெரிட் தகுதிக்கு எதிரானது அல்ல, ஆனால் அது பரவலான தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒன்றிய அரசு நீட் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினரின் இட ஒதுக்கீட்டை அமலபடுத்த்துவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், மருத்துவ கலந்தாய்வு தாமதமானது.

அதிக அளவிலான மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி உடனடியாக மருத்துவ கலந்தாய்வைத் தொடங்கக் கோரி இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு ரீதியாகச் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை வரும் மார்ச் மாதம் விரிவாக விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்