Aran Sei

டெல்லி கலவரத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு பிணை – தாயின் வாக்குமூலம் இருந்தும் போதிய சாட்சியம் இல்லையென நீதிமன்றம் உத்தரவு

டெல்லி கலவரத்தில் இர்பான் என்ற நபரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்ட இருவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்றுக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் பிப்ரவரி 26 வடமேற்கு டெல்லி பகுதியில் நடந்த கலவரத்தின்போது இர்பான் என் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சன்னி மற்றும் பிரிஜ் மோகன் சர்மா ஆகியோர் மீது, குற்றம்சாட்ட சிசிடிவி பதிவுகள் போன்ற போதிய ஆதாரங்கள் இல்லை என்றுக் கூறி உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்குகளை விசாரிப்பதில் மெத்தனம் – டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

மேலும், ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கைட், நேரடியாகவோ, மறைமுகமாவோ அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்க எவ்வித ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் விசாரணையின் போது, ஒரே நேரடி சாட்சியான, இறந்தவரின் தாய், கடந்த பிப்ரவரி 26 அன்று 7.30 மணியளவில் தன் மகனோடு பால் வாங்க சென்றபோது, இரும்பு தடி உள்ளிட்ட ஆயுதங்களால் 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் தன் மகனைக் கொடூரமாகத் தாக்கியதாக அவர் தெரிவித்திருந்தார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்துக்கு பிணை – ஆரோக்கிய சேது செயலியை நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவு

மேலும், அந்தக் கும்பலில் அந்தப் பகுதியைச் சார்ந்த கபார், லல்லா, பங்கஜ் மற்றும் சுப்ஸி வாலா ஆகியோர் இருந்ததாக அவர் தெரிவித்திருந்ததாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீழமை நீதிமன்றத்தில் சன்னி மற்றும் பிரிஜ் மோகன் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவைத் தள்ளுபடி செய்யவே, அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கொலைக் குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்