பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 84 வயதான பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
பார்கின்சன் நோய் மற்றும் இதர உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டான் ஸ்வாமி, உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்கவேண்டுமென்றும் சில நாட்களுக்கு முன்னர், பிணை மனுமீதான விசாரணையின்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பீமா கோரேகான் வழக்கு : பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு பிணை மறுப்பு
மேலும், ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடட்டுமா என நீதிமன்றம் கேட்ட போது, அரசு மருத்துவமனையான ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிப்பதை விட சிறையில் இருந்தே தான் இறந்து போகலாம் என்றும் ஸ்டான் ஸ்வாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மே 28 அன்று, மும்பை உயர்நீதிமன்றம் ஸ்டான் ஸ்வாமியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும், அதற்கான தொகையை அவரே செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, நவி மும்பை பகுதியில் உள்ள ஹோலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டான் ஸ்வாமிக்கு நேற்றை தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டான் ஸ்வாமி கடந்த வருடம் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.