Aran Sei

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

ல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர் பகுதியில் வசிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுதா பரத்வாஜுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பிணை உத்தரவை வழிமொழியும்போது, ​​அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என்று சுதா பரத்வாஜுக்கு உத்தரவிட்டிருந்தது.

பீமா கோரேகான் வழக்கு – வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் பிணையில் விடுதலை

அதைத் தொடர்ந்து, மும்பையில் தங்கியிருப்பது அதிக செலவை தரக்கூடியதெனவும் அதற்குப் பதிலாக, மும்பைக்கு அருகில் உள்ள தானேவில் தங்க அனுமதிக்குமாறும் நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், அண்மையில் அவர் தாக்கல் செய்த மனுவில், தனது நண்பருடன் மும்பையில் உள்ள ஓஷிவாரா எனும் புறநகர் பகுதியில் வசிக்க அனுமதி கோரி இருந்தார்.

அம்மனுவை, நேற்று (மார்ச் 1) விசாரித்த சிறப்பு நீதிபதி டி.இ.கோதாலிகர், இக்கோரிக்கை குறித்த தேசிய புலனாய்வு முகமையின் கருத்தை தாக்கல் செய்யுமாறு அதன் வழக்கறிஞரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சுதா பரத்வாஜ் – இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரின் சிறை வாழ்க்கை

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு சுதா பரத்வாஜ், ஆனந்த டெல்டும்டே உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்