Aran Sei

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ரோனா வில்சன் – இடைக்கால பிணை வழங்கியுள்ள என்.ஐ.ஏ நீதிமன்றம்

credits : the scroll

ல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சிறை கைதிகள் உரிமைகள் செயற்பாட்டாளர் ரோனா வில்சனுக்கு 2 வாரங்கள் இடைக்கால பிணை வழங்கித் தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோனா வில்சனின் தந்தை ஆகஸ்ட் 18 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தந்தையின் 30 ஆம் நாள் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவருக்கு இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி 2018 ஆம் தேதி பூனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் மீது பிணையில் வெளிவர குறைவான வாய்ப்புகளே உள்ள கடுமையான சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரோனா வில்சன் சார்பாக அவரது வழக்கறிஞர் நீரஜ் யாதவ் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஆகஸ்ட் 18 ஆம் தேதி உயிரிழந்த ரோனா வில்சனின் தந்தை உடல் அடுத்த நாள் அடக்கம் செய்யப்பட்டது. வில்சன் மதவழக்கப்படி தந்தை உயிரிழந்த 30 ஆம் நாளில் தேவாலத்தில் வழிபாடு கூட்டத்திற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில், அவரின் குடும்பத்தினரை சந்திக்கவும், வழிபாடு கூட்டத்தில் கலந்து கொல்லவும், அவருக்குப் பிணை வழங்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பிணை வழங்க கோரியிருந்த வில்சன், பிணை வழங்கப்பட்டு குடும்பத்தினரை சந்திக்க முயன்றால், அது சற்று ‘ஆறுதலாக’ இருக்கும் என தெரிவித்திருந்தார்.

வில்சனின் பிணை மனுவை எதிர்த்த தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), ”அவரின் தந்தையின் இறுதி சடங்குகள் ஏற்கனவே முடிந்து விட்டது. அவரின் சகோதரர் அல்லது வேறொரு குடும்பத்தினரால் கூட வழிபாடு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.” என நீதிமன்றத்தில் வாதிட்டது.

பிணையில் செல்வதற்காக காரணங்களை வில்சன் உருவாக்குகிறார் என குற்றம்சாட்டிய என்.ஐ.ஏ, ”வழிபாடு கூட்டத்திற்கு அவரின் இருப்பு கட்டாயம் இல்லை அல்லது அவர் இல்லையென்றால் கூட்டம் நடைபெறாது என அவர் நிரூபிக்கவில்லை” என கூறியுள்ளது.

ரோனா வில்சனின் பிணை மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி டி.இ. கோதாலிக்கார், “இரண்டு நபர் ஜாமீனுடன் ரூ. 50 ஆயிரத்திற்கான கடன்ப் பத்திரங்களை தாக்கல் செய்தபிறகு செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 27 ஆம் தேதிவரை பிணை வழங்கப்படும். கேரளாவில் தங்கவிருக்கும் இடத்தில் தகவல்களை என்.ஐ.ஏ காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும். கேரளாவில் வசிக்க இருக்கும் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 24 வரையிலான காலத்தில் உள்ளூர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் மற்றும் கேரளாவை விட்டு வெளியே எங்கும் செல்லக் கூடாது” ஆகிய நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 16 பேர்களில், உடல்நிலை காரணமாக தெலுங்கு கவிஞர் வரவர ராவ்விற்கு 6 மாதங்களும், தாயின் முதலாம் ஆண்டு நினைவு சடங்களில் கலந்து கொள்ள சுரேந்திர கட்லிங்கிற்கு 9 நாட்களும் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது நபராக ரோனா வில்சனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்