எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
2020ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய புலணாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த் டெல்டும்டேவின் விண்ணப்பத்தின் நகலை தலோஜா சிறைக் கண்காணிப்பாளரிடம் வழங்குமாறு அவரது வழக்கறிஞருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சகோதரர் மறைவால் தாயை சந்திக்க பிணை கோரிய ஆனந்த் டெல்டும்டே – நிராகரித்த நீதிமன்றம்
அடுத்த விசாரணையின்போது, இக்கோரிக்கை தொடர்பான தனது அறிக்கையை சிறை கண்காணிப்பாளர் சமர்பிப்பார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு சுதா பரத்வாஜ், ஆனந்த டெல்டும்டே உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்த் டெல்டும்டே சகோதரர் மரணம் – ஆனந்த்தின் மனுவை ஏற்று தாயுடன் பேச 5 நிமிடம் அனுமதித்த நீதிபதி
பீமா கோரேகான் : புனைவு வரலாறாகும் ஆபத்து – ஆனந்த் டெல்டும்டே
மனுதர்மத்தை அம்பேத்கரும் கொளுத்தினார் – ஆனந்த் டெல்டும்டே
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.