Aran Sei

ரயில் மோதி உயிரிழக்கும் யானைகள் – உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கேரளாவின் கொட்டிகட் மற்றும் தமிழகத்தின் மதுக்கரை பகுதியில் ரயில் தண்டவாளங்களில் யானைகள் மரணித்தது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரயில் மோதி உயிரிழக்கும் யானைகள் – அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் மரணம்

மேலும், இதுகுறித்த கூட்டுக்குழு கூட்டம் ஒன்றை அமைத்துள்ள ஒன்றிய அரசு, யானைகள் தொடர்பான மத்திய கண்காணிப்பு குழு, தமிழ்நாடு, கேரள தென்னக ரயில்வே அதிகாரிகள், இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருடன் ஒரு மாதத்திற்குள் நடைபெற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, சல்லிமடா-மதுக்கரை ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் செல்லும் 17 கிலோமீட்டர் தூர “ஏ” லைன் ரயில்பாதையில் இரவு 10 முதல் காலை வரை 6 யானைகள் இறந்துள்ளதாகவும், மதுக்கரை-காஞ்சிகோட் பகுதியில் உள்ள “பி” லைன் பாதையில் 1 யானை இறந்துள்ளதாகவும் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் மோதி 8 யானைகள் மரணம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்

மேலும், இதுகுறித்து நடைபெறும் அந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரள தென்னக ரயில்வே நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசின் யானைகள் கண்காணிப்பு குழு அதிகாரிகள் இன்றிலிருந்தே நடவடிக்கை எடுப்பதை குறித்து முறைகளை வகுக்க வேண்டும். மேலும், போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்லாது, யானைகள் மரணம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையின் வழியாக, யானைகள் மரணத்திற்கு ரயிலை இயக்குபவருக்கு ரயில் பாதைகள் முறையாக இல்லாததும், ரயில் வருகின்ற போது யானைகள் தப்பித்தற்கான சூழல் இல்லாததுமே காரணம் என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்