Aran Sei

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேளச்சேரியில் பிடிபட்டது – மறுவாக்குப்பதிவு நடைபெறுமா?

வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது பிடிபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எடுத்துச் சென்றது தேர்தல் விதிமுறை மீறல் எனக் கூறிய அவர், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தலில் பயன்படுத்தப்பட்டதில்லையென தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன்  சென்னை தரமணி 100 அடி சாலையில், இரண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 பேர், 4 வாக்குபதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர்.

மத்திய ஆயுதப் படை குறித்த மம்தாவின் விமர்சனம் : விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 4 பேரும் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிடிபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குபதிவு நடத்தி திமுக கூட்டணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை தேர்தலில் பயன்படுத்தபடாத இயந்திரங்கள் அவற்றில் வாக்குகள் பதிவாகவில்லையெனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தொழிற்சங்கத்தை கண்டு அச்சம் கொள்கிறதா அமேசான்? – பணியாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதாக குற்றச்சாட்டு

மேலும், வாக்குபதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ததுடன், அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

விசாரணையில் அந்த இயந்திரங்கள் வாக்குபதிவுக்கு பயன்படுத்தப்பட்டது என்று தெரியவந்துள்ளது. அவை 50 நிமிடங்கள் செயல்பாட்டில் இருந்துள்ளதாகவும், அதில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான தேர்தல் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பட்டுள்ளது. மறு தேர்தல் நடத்தப்படுமா என்பது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Source : Hindu Tamil Thisai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்