Aran Sei

‘எழுவர் விடுதலை, மதுவிலக்கு, மாநில நலன்’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

திமுகவின் கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்படும் : திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மது ஒழிப்பு, மாநில சுயாட்சி போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு போரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்ப் பாடம் கட்டாயம் – திமுக தேர்தல் அறிக்கை

மேலும், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்கான  மதுவே காரணம் என்றும் படிப்படியாக மது ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுஒழிப்பு குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சர்க்காரியா குழுவின் பரிந்துரை படி மாநில முதலமைச்சர் தேர்ந்தெடுக்கும் 3 பேரில் ஒருவரை மாநில ஆளுநராக நியமிக்க வேண்டும் என்றும், மாநில சட்டசபை இயற்றும் மசோதாக்கள் குறித்து உரிய நேரத்தில் ஒப்புதல் தரவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருதல் மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற கல்வி குறித்த நலன்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹரியானாவை தொடர்ந்து ஜார்க்கண்டில் தனியார்துறையில் இடஒதுக்கீடு – தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் உள்ள கனிம மணல் குவாரிகள் மற்றும் க்ரானைட் சுரங்க தொழில் போன்ற வருவாய் ஈட்டும் தொழிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில், மாநில சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புதல், அரசுத்துறையில் உள்ள பணியிடங்களைத் தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையத்தில் மூலம் நிரப்புதல் போன்றவையும் கூறப்பட்டுள்ளன.

மேலும் , மனித மலத்தை அள்ளுவதற்கு தடை, பெண்களுக்கான பாதுகாப்பு, மாநில நலன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SOURCE: THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்