Aran Sei

திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து வதந்தி கிளப்பிய பெண்: வழக்குப் பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு

மூகங்களிடையே வெறுப்பை தூண்டும் வகையிலான காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அடையாளம் தெரியாத பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மாநில காவல்துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் இருந்து அக்காணொளியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

வரும் சட்டபேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணைந்து கொண்டால் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி  மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கம் காசும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்ப் பாடம் கட்டாயம் – திமுக தேர்தல் அறிக்கை

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலான காணொளி ஒன்றில், “பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை, ஆதி திராவிடர் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டால்  ரூ. 60,000 பணம் மற்றும் 1 பவுன் தங்க காசு பரிசு என திமுக தேர்தல் அறிக்கையின் 259-ஆவது வாக்குறுதியாக கூறப்பட்டுள்ளது. இது சாதிகலப்பு திருமணங்களை ஆதரிக்கிறது. இது சமூக சீரழிவை ஏற்படுத்தும்.” என்று அப்பெண் பேசியிருந்தார்.

மேலும், அந்தக் காணொளியில், “மேலே குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த எல்லோருடைய வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். நம்முடைய வாக்குகளும் திமுகவுக்கு அளிக்கக் கூடாது என்பதை அனைவரும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு சமூகங்களிடையே வன்மத்தைத் தூண்டும் விதமாகவும் இந்தக் காணொளியில் பேசப்பட்டிருக்கிறது என்றும் இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்திருந்தார்.

மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் – திமுக தேர்தல் வாக்குறுதி

இந்நிலையில், இன்று (மார்ச் 26), தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மாநில காவல்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அப்பெண் காணொளியில் வெளியிட்டுள்ள கருத்துகள் சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்ட வாய்ப்புள்ளதால், அப்பெண்ணை அடையாளம் கண்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் இருந்து அக்காணொளியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், அந்தப் பெண்ணின் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A-ன் கீழ் தண்டனை வழங்கத் தகுந்தது குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்