Aran Sei

ஆ.ராசா பிரச்சாரம் செய்ய 48 மணிநேரம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீட்டு பேசிய ஆ.ராசா பேசிய கருத்துச் சர்ச்சைக்கு உள்ளானது.

“என் விமர்சனம் முதலமைச்சரை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” – ஆ.ராசா

இதுகுறித்து, தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமியும் தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கியிருந்தார்.

இந்நிலையில், ”திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமை பற்றிதான் விளக்கம் கொடுத்தேன், அது முதல்வரின் அம்மா குறித்து தவறாகப் பேசியதாகக் கொண்டு செல்லப்படுவதால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதல்வர் கண்கலங்கியதைப் பார்த்தேன். அதற்காக முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்” என ஆ.ராசா தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் மீதான விமர்சனம் – விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மேலும், இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு உத்தரவிட்டிருந்தார்
.
இதைத்தொடர்ந்து, நேற்று மார்ச் 31 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு நேரில் ஆஜராகி ஆ.ராசா பதிலளித்திருந்தார் .

அந்தப் பதிலில் ,மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமைகுறித்து உவமானத்துடன் பேசியதாகவும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளவும், மேலும் தன் மீது அதிமுக தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள அனைத்து புகார்களின் நகல்களையும் வழங்கினால் விரிவான விளக்கம் அளிக்க இயலும் என்றும் ஆ.ராசா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு , ஆ.ராசாவுக்கு 48 மணிநேரம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடைவிதித்துள்ளார்.

மேலும், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவை நீக்கியும், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக் கூடாது எனவும் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆ.ராசா தாக்கல் செய்திருந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்