Aran Sei

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – 8 கொரொனா நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லி பத்ரா மருத்துவமனையில் இரையகக் குடலியவியல் (gastroenterology) துறைத் தலைவர் உள்ளிட்ட 8 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் அதிக ஆக்சிஜன் தேவை ஏற்பட்ட 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்ரா மருத்துவமனையில், ஒரு மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், தேவையான ஆக்சிஜனில் 50 விழுக்காடு ஐநாக்ஸ் மற்றும் கோயல் நிறுனவம் வழங்கும் என டெல்லி அரசு தெரிவித்திருந்த நிலையில், கோயல் நிறுவனம் விநியோகிக்க மறுத்துவிட்டதாக மருத்துமனை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 நோயாளிகள் உயிரிழப்பு – ஆபத்தில் 200 நோயாளிகள்

இதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என உறுதியளித்த உயர்நீதிமன்றம் கோயல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டது.

திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்களுக்கான நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்கும்படி உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

பாத்ரா மருத்துவமனையில் 304 கொரோனா நோயாளிகளும், அதில் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில்  சுமார் 234 நோயாளிகளும் உள்ளனர். இது போன்ற மோசமான காலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் சிக்கல்களைத் தீர்க்க வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை பயனுள்ளதாக  இல்லை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறிவியலாளர்களின் குரலுக்கு செவிசாய்க்காத அவலம் – உண்மையை மறைத்ததா மத்திய அரசு?

பாத்ரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ்.சி.எல் குப்தா, “நாங்கள் மற்ற ஐந்து முக்கியமான நோயாளிகளை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் கடந்த வாரம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதை  வெளிப்படையாக தெரிவித்திருந்தன.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்