Aran Sei

மழை வேண்டி நிர்வாண ஊர்வலம் நடத்திய கிராமத்தினர் – போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்த காவல்துறை

த்தியப்பிரதேச மாநிலத்தில் மழை வரம் வேண்டிச் சிறுமிகளை நிர்வாணமாக ஊர்வலம்  கூட்டிச் சென்ற விவகாரத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேரின் மீது போக்சோ சட்டம் பதியப்பட்டுள்ளது.

தாமோ மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் இந்த பூஜை நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதி காவல்கண்காணிப்பாளர்,  உள்ளூர் வழக்கத்தின்படி,  மழைக் கடவுளை மகிழ்விக்கும் விதமாகச் சிறுமிகள் நிர்வாணமாக அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த நடைமுறையின் மூலம், மழை பெய்யும் என கிராம மக்கள் நம்புவதாகக் கூறிய அவர், “இந்த விவகாரம்குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிறுமிகள் நிர்வாணமாக நடக்க நிர்பந்திக்கப்பட்டனர் என்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் காவல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த நோட்டீஸ்சிஸ்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

Source: THE NEW INDIAN EXPRESS 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்