Aran Sei

‘வளர்ப்பு மிருகங்களை பலியிடத் தடை’ – எதிர்ப்புகள் வலுத்ததால் ‘ஆலோசணை’ எனப் பின்வாங்கிய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

ம்மு காஷ்மீரில் விலங்குகளை கொல்லத் தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இது ‘, உத்தரவு அல்ல ஆலோசனை’ என்றும் விலங்குகளைக் கொல்ல தடை விதிக்கப்படவில்லை என்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜூலை 15, 2021 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், விலங்குகள் நலச் சட்டங்களை அமல்படுத்தவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவையான அனைத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

டேனிஷ் சித்திக்கி: உண்மைக்கு ஒளியூட்டிய மக்கள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்

நிர்வாகத்தின் இந்த உத்தரவு, திருவிழாக்களில் விலங்குகளை தியாகம் செய்யும் (பலி கொடுக்கும்) இஸ்லாமிய மதக் கோட்பாட்டிற்கு எதிரானது என அந்த மக்கள் கருதுகிறார்கள். மேலும், மக்களின் மத வழிப்பாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக ஹூரியத் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தெரிவித்தன.

ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விலங்குகள் நல வாரியத்தால், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அனுப்பட்ட செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் கால்நடை வளர்ப்புத் துறை முதன்மை செயலாளர் நவீன் குமார் சவுத்ரி கூறினார்.

‘பிணை உத்தரவைப் பெற பழங்காலம் போல் புறாக்களை நம்பியிருக்கிறதா சிறை நிர்வாகம்?’ – உச்சநீதிமன்றம் கேள்வி

”விலங்குகளை நல வாரியத்தின் விதிகளுக்கு இணங்குமாறு மட்டுமே அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. விலங்குகளை பலியிடுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இது வெறும் ஆலோசனை தான், உத்தரவு அல்ல” என அவர் கூறினார்.

இஸ்லாமியர்கள் தங்கள் மதக் கடமைகளைச் செய்வதில் இருந்து ஏன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்? என முத்தஹிதா மஜ்லிஸ் இ உலமா (எம்.எம்.யு) அமைப்பு தெரிவித்துள்ளது.

மாடுகளின் இனப்பெருக்கத்தை கண்காணிக்க பட்ஜெட்டில்  ₹566.2 கோடி நிதி -அசாம் நிதித்துறை அமைச்சர்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாட்டிறைச்சிக்காக விலங்குகளை தடை செய்வதற்கான உத்தரவு ஜம்மு காஷ்மீர் மக்களின் ’மத சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சட்டத்தை நேரடியாக மீறுகிறது’” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்