Aran Sei

புறவாசல் வழியே கல்விச் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும் – டெல்லி உயர்நீதி மன்றம்

Image Credits: India TV News

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற கடினமாக உழைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் புறவாசல் வழியே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் தாக்கல் செய்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எல்.என். தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்தியாவை பொறுத்தவரை, மத்தியஅரசின் கீழ் இயங்கும் மருத்துவக்கல்வித் துறையின் (டிஎம்இ) சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஆனால், இந்தகலந்தாய்வில் பங்கேற்காத 5 மாணவர்கள் எல்.என். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்.

‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் சித்தாந்தம்’ – காங்கிரஸ் விமர்சனம்

நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்வித் துறையின் கலந்தாய்வில் பங்கேற்ற பின்னரே, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பளித்துள்ளது. .

இதுகுறித்து தகவலறிந்த இந்திய மருத்துவக் கவுன்சில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு 2017-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், சம்பந்தப்பட்ட 5 மாணவர்களை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அந்தக் கல்லூரியோ, மாணவர்களோ பொருட்படுத்த வில்லை. கல்லூரி நிர்வாகம் மாணவர்களைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற அனுமதித்தது.

‘பொய்கள், பொய்கள், எண்ணிலடங்கா பொய்களை சொல்லும் உ.பி. அரசு’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

இந்திய மருத்துவக் கவுன்சிலின் நெருக்குதல் அதிகமாகவே, அந்த 5 மாணவர்களும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததன் பேரிலேயே தங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்ததாகவும், எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனைக் கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்றம், ”மருத்துவக் கல்வித் துறையின் கலந்தாய்வில் பங்கேற்காமல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டது தவறு என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மாணவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்” மருத்துவக் கலந்தாய்வில் பங்கெடுக்காமல் மாணவர்கள் சேர்த்தது தவறு. இதற்கு மாறாக மனுதாரர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி, 2017-ம்ஆண்டே இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டும் மாணவர்களும், கல்லூரியும் அதனைப் பொருட்படுத்தவில்லை. எனவே,மாணவர்களின் மனு நிராகரிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “நம் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக கடினமாக உழைக்கின்றனர். போதிய தகுதி இருந்தும் கூடசில மாணவர்களால் கல்லூரிகளில் சேர முடியவில்லை. அப்படி இருக்கும்போது, இதுபோல் புறவாசல் வழியாக கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க வேண்டும். மனுதாரர்கள் தங்களை குழப்பத்தில் ஆழ்த்தியதற்கு தங்களை மட்டுமே குற்றம் சாட்ட வேண்டும்” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

“ஏப்ரல் 26, 2017 அன்று வெளியேற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மாணவர்கள் செயல்பட்டிருந்தால், நான்கு வருட வாழ்க்கை வீனாவதைக் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந்த உத்தரவும் வராத நிலையிலும் அவர்கள் தொடர்ந்து கல்லூரியில் படித்து வந்தனர். மாணவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆபத்து இது” என்று நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது.

 

SOURCE : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்