Aran Sei

மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு அதிகரித்து வருகிறது – இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

credits : the indian express

த்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கை அதிர்ச்சையை, அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அரசின் எதேச்சதிகார குணத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் ஒன்பது பேர் (அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிரிதி இரானி, ஜெய்சங்கர், முக்தர் அப்பாஸ் நக்வி, ஹர்தீப் சிங் பூரி, பாபுல் சுப்ரியோ, அனுராக் தாக்கூர், கிரண் ரிஜிஜு) அடங்கிய குழு 97 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் குழுவின் அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், “ஊடகங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கை, அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தைப் பற்றி ஊடகங்கள் என்ன பேச வேண்டும் என்பதற்கான செயல்திட்டம் தான் இந்த அறிக்கை” என்று கூறியுள்ளது.

சிங்கு எல்லையில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் – 14 நாள் நீதிமன்ற காவல்

மேலும், பத்திரிகை சுதந்திரமும் ஜனநாயகமும் வெகுவாக குறைந்து வரும் காலகட்டத்தில் இது போன்றொரு அறிக்கையை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக கூறியுள்ள இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், ”இந்த அறிக்கை, அரசாங்கத்திற்கு எதிராக ஊடகங்கள் முன் வைக்கும் விமர்சனங்களையும் விசாரணைகளையும் ஒடுக்கும் அரசின் எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளது.

மரணப்படுக்கையில் இருக்கும் தாய் – மகனின் ஜாமீன் மனுவை விசாரிக்க காலம் தாழ்த்தும் உச்சநீதிமன்றம்

”எந்தப் புள்ளிவிபரங்களும் இல்லாமல், அரசாங்கத்துக்கு எதிராக தவறான கண்ணோட்டத்தோடு போலிச் செய்திகள் வெளியிடுபவர்களை மட்டுப்படுத்த வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ”மிகவும் அபாயகரமான போக்கு” எனப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

”போலிச் செய்தி என்றால் என்ன என்பது தொடர்பான தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், இந்தத் திட்டம் அரசை விமர்சித்து எழுதுபவர்களை முடக்கவே அரசால் திட்டமிடப்பட்டுள்ளது” எனவும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

`அருந்ததி ராய் நூலை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ – தமுஎகச

மத்திய அமைச்சர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, ஊடகச் சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களை மிகவும் சிறுமைப்படுத்துகிறது என்று கூறியுள்ள சங்கம், ”மத்திய அரசு, கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ள அரசியலமைப்பின் மாண்புகளையும், ஊடகங்களில் உள்ள கருத்துக்களின் பன்முகத்தன்மையையும், பாதுகாக்க உறுதியளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்