Aran Sei

லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா

க்கிம்பூர் கேரி கலவரத்தின்போது, பத்திரிக்கையாளர் ராமன் கஷ்யப் உயிரிழந்தது தொடர்பாக, நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (இஜிஐ) கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”விவசாயிகளை அச்சுறுத்த திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில், பத்திரிக்கையாளர் ராமன் கஷ்யப் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காஷ்யப் மரணம் தொடர்பாக பல கதைகள் தெரிவிக்கப்படுகின்றன. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார், கார் தாக்கி இறந்தார் என பலவாறு சொல்லப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூருக்கு சொந்த வாகனங்களில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு – லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா

”கஷ்யப் உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய கேமராவில் இருந்து மீட்டு, அதை ஆராய்ந்து அவரது மரணத்திற்கு என்ன காரணமாக அமைந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என இஜிஐ குறிப்பிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த விவசாயிகளில் நான்கில் ஒருவரான குர்வீந்தர் சிங்கின் இரண்டாவது பிரேத பரிசோதனையிலும் துப்பாக்கி குண்டுக் காயம் இல்லை என வந்ததை அடுத்து அவரது உடலைக் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.

முதலாவது பிரேத பரிசோதனையையில் குர்வீந்தர் சிங் உடலில் துப்பாக்கி குண்டு காயம் இல்லை என்று குறிப்பிட்டப்பட்டிருந்ததை அடுத்து, அதனை ஏற்க மறுத்த அவரது குடும்பத்தினர், அவரது உடலை வாங்க மறுத்தனர்.

‘மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காதது ஏன்? உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?’ – சஞ்சய் ராவத்

 

”விவசாயிகள் மோதியபிறகு நிலை தடுமாறிய ஆஷிஷ் சர்மாவின் கார் கரும்பு வயலுக்குள் நுழைந்தது, அப்போது அவரை பிடிக்கச் சென்ற குர்வீந்தர் சிங்கை அவர் துப்பாக்கியால் சுட்டத்தை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.” என குர்வீந்தர் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என சத்தீஸ்கர், பஞ்சாப் மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

Source : PTI

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்