Aran Sei

போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

credits : indian express

போராடுபவர்களின் உடை மற்றும் இனத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் கட்டுகதைகளுக்கு ஊடகங்கள் உடந்தையாகக் கூடாது என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு அறிக்கை வெளிடிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 9-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என கங்கனா ரனாவத் உட்பட பல பாஜக தலைவர்கள் கூறியு வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா ”விவசாயிகளின் போராட்டங்களுக்கு மாவோயிஸ்ட் மற்றும் காலிஸ்தான் (சீக்கிய பிரிவினைவாத இயக்கம்) இயக்கத் தொடர்புகள் இருப்பதாக”  தெரிவித்துள்ளார்.

தில்லியில், வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது குறித்து எழுதப்பட்ட நோட்டீசின் படத்தை அமித் மால்வியா பகிர்ந்துள்ளார். அத்துடன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “தில்லியை எரிக்கும் வாய்ப்புக்காக” காத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதன்முதலாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்களின் பங்களிப்பு உள்ளதென்று கூறினார். அவரைத் தொடர்ந்து,  அமித் மால்வியாவும் அதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அரசின் உணவை மறுத்த விவசாயிகள் – சுயமரியாதையின் அடையாளம் என பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி

“அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளை ‘தேச விரோதிகள்’ என்றும் ‘காலிஸ்தான் ஆதரவாளர்கள்’ (சீக்கியர்களுக்கான தனி மாநிலத்தைக் கோருபவர்கள்) என்றும் கூறும் பாஜக தலைவர்களின் நிலைப்பாட்டைக் கண்டு நான் வருந்துகிறேன்” என பஞ்சாப் முன்னால் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.

தலைநகரில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக காலிஸ்தானியர்கள், தேசவிரோதிகள் என்று எவ்வித ஆதாரமும் இன்றி சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா (இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு) வருத்தம் தெரிவித்துள்ளது.

 

ஊடக நிறுவனங்கள் விவசாயிகளின் போராட்டத்தை நேர்மையாகவும் தங்களின் கருத்துக்களை முன் வைத்துப் போராடுவதற்கு அரசியலமைப்பு கொடுத்த் உரிமைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகப் பாகுபாட்டைக் காட்டாமல், எந்தப் பக்க சார்பும் இன்றி செய்தி வெளியிட வேண்டும் என எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா கூறியுள்ளது.

போராடுபவர்களின் உடை மற்றும் இனத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் எந்தவொரு புனைவுக்கும் ஊடகங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது “என்று இஜிஐ தலைவர் சீமா முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்