Aran Sei

பெகசிஸ் ஸ்பைவேர்: உச்சநீதிமன்றத்தின் தலைமையில் சுதந்திரமான விசாரணை வேண்டும் – இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, மும்பை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில், தற்போது இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கமும் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சார்ந்த என்.எஸ்.ஒ நிறுவனத்தால் இந்தியாவில் கண்காணிக்கப்பட்டோர் பட்டியலில் இந்துஸ்தான் டைம்ஸ், நிர்வாக ஆசிரியர் ஷிஷிர் குப்தா, இந்தியா டுடே, நெட்வொர்க் 18, தி இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட முக்கியமான பத்திரிகைக்யாளர்களின் பெயரும் இடம்பெற்றிருந்ததாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் இரண்டு தொடர் பங்களிப்பாளர்கள் பெயரும்  இடம்பெற்றிருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுதலாக உள்ளவர்கள் குறிவைத்து கண்காணிக்கப்பட்டாளும் பரவாயில்லை. ஆனால், அதிக எண்ணிகையில் பத்திரிகையாளர்களும் மக்கள் உரிமைப் போராளிகளும் இலக்கானதன் காரணம் என்ன?, இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை மீது நடப்பட்ட அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்ட, வெட்ககேடான தாக்குதலாகும்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்