Aran Sei

‘திரிபுரா வன்முறையை பதிவு செய்த 102 பேர் மீது வழக்கு’ – இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது திரிபுரா காவல்துறை வழக்கு பதிந்துள்ளதற்கு இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் அடைந்த தோல்வியை மறைக்கவும் திசைத்திருப்பவும் திரிபுரா அரசின் முயற்சி இது” என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ராமநாதபுரம் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் நிறுத்திவைப்பு – சு.வெங்கடேசன் நடவடிக்கை

நேற்று முன் தினம்(நவம்பர் 6), திரிபுரா காவல்துறை 102 சமூக வலைதள பயனாளர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம், குற்றவியல் சதி போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. மேலும், அந்த நபர்களின் அனைத்து விவரங்களையும் கேட்டுள்ள காவல்துறை, அவர்களின் கணக்குகளையும் முடக்குமாறு ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

“அண்மையில் நடந்த வகுப்புவாத வன்முறைகள் குறித்து புகார் அளித்ததற்காகவும், அது குறித்து எழுதியதற்காகவும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது வழக்குப் பதிவு செய்த திரிபுரா காவல்துறையின் நடவடிக்கை இந்திய பத்திரிகையாசிரியர் சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது. ‘திரிபுரா எரிகிறது’ என்று ட்வீட் செய்ததற்காக பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முறையும் ஜாமீன்  வழங்கல் முறையும்  கடுமையாக உள்ள இச்சட்டத்தை, வகுப்புவாத வன்முறையைப் பற்றி புகார் செய்பவர்களுக்கும் அவ்வன்முறையை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் தண்டிக்காமல், இவ்வன்முறை குறித்து நியாயமான விசாரணையை மாநில அரசு நடத்த வேண்டும். மேலும், பேச்சு சுதந்திரத்திற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக இத்தகைய சட்டங்கள் நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்படப்பட முடியாத வண்ணம், முறையான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்ற வழங்க வேண்டும் என்ற எங்களது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

‘திரிபுராவில் இந்துத்துவவாதிகளால் தாக்கப்படும் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள்’ – நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் அறிவித்த திருமாவளவன்

வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக அக்டோபர் 26 அன்று, திரிபுராவில் உள்ள சாம்தில்லாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது ஒரு மசூதி தாக்கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அருகிலுள்ள ரோவா பஜாரில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று வீடுகளும் சில கடைகளும் சூறையாடப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்