Aran Sei

உத்திரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர்மீதான தாக்குதல் – நிர்வாகத்தின் கடுமையான போக்கு என எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு கண்டனம்

த்திரபிரதேச மாநிலம் உன்னோவ் பகுதியில் ஊடகவியலாளர்மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடியது என எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக உத்திரப் பிரதேச நிர்வாகத்தின் ’கடுமையான போக்கு’ என அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் 254 லட்சாதிபதிகள் ஐக்கியக் குடியரசில் குடியேறியுள்ளனர் – ஆன்டி கரப்சன் சாரிட்டி தகவல்

உள்ளூர் கவுன்சில் உறுப்பினர்களை கடத்த அரசு உதவியதை படம்பிடித்ததற்காக, ஊடகவியலாளர் கிருஷ்ணா திவாரி, தலைமை வளர்ச்சி அதிகாரி திவ்யன்ஷ் பட்டேல் மற்றும் பாஜகவினரால் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான இந்தச் சம்பவம் இது முதல்முறையல்ல, இதில் உத்திரபிரதேச அரசின் செயலாக்கம், வரலாறு மற்றும் கலாச்சாரம் உள்ளது என எடிட்டர்ஸ் கில்ட் குற்றம்சாட்டியுள்ளது.

மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை – சட்டமியற்றும் அசாம் மாநில அரசு

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குற்றங்கள், அரசு அத்துமீறல்கள் மற்றும் தொற்றுநோய் நிர்வகிப்பது குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதை தடுக்கும் வகையில், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வேலையில் உத்திரபிரதேச அரசு ஈடுபட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களைத் தண்டிப்பது, அபராதம் விதிப்பது மற்றும் சிறையில் அடைப்பது போன்ற வேலைகளை அரசு மேற்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய அதிகாரி பின்னர் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டாலும், ”நிர்வாகத்தின் கடுமையான தன்மை ஊடகத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கிறது. உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இது முக்கியமானதாகிறது” என எடிட்டர்ஸ் கில்ட் கூறியுள்ளளது.

‘திரைப்படத்தில் சமூகநீதி பேசும் நடிகர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது’ – நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

சம்பந்தப்பட்ட அதிகாரிமீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள எடிட்டர்ஸ் கில்ட், மாநிலத்தில் சுயாதீன இதழியலுக்கான சூழலை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று கோரியுள்ளது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்