Aran Sei

எடப்பாடி பழனிசாமி vs மு.க.ஸ்டாலின் – ஒரே மேடையில் விவாதம்? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தைச் சந்தித்து, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு அடங்கிய 97 பக்கம் கொண்ட புகார் மனுவை அளித்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ”உலக வங்கி நிதி முதல், ரேஷன் கடை அரிசியை வெளிமார்க்கட்டில் விற்றது வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் செய்துள்ள ஊழல்கள் குறித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக மாணவரணி செயலாளர் கைது – விரைந்து தண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநரிடம் அளித்த ஊழல் புகார் மனுவை சுட்டிகாட்டி பேசிய அவர், அதிமுகவை பற்றி திமுக அவதூறு பரப்புவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், தமிழக அரசுத்துறைகளின் ஊழல் புகார்கள் குறித்து ஒரே மேடையில் நேரடியாக விவாதிப்பதற்கு தயாரா என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் “ஊழல் நாற்றம் வீசும் எடப்பாடி பழனிசாமி, விவாதத்திற்கு சவடால் விடுகிறார். CBI விசாரணைக்கான தடையை நீக்கி, அமைச்சரவை மீதான எனது புகார்களை விசாரிக்க ஆளுநரின் அனுமதி பெற்றுவிட்டு இடம் – நேரம் குறியுங்கள். உங்கள் ஊழல்களைத் தோரணம் தொங்கவிட ஒற்றை ஆளாக நான் ரெடி! நீங்கள் ரெடியா Mr.பழனிசாமி?” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு பதில் சவால் விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்