Aran Sei

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு

மிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலில், 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று பிரதான எதிர்கட்சியாக உள்ளது. இதனை அடுத்து எதிர்கட்சி தலைவரைத் தேர்தெடுக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மே 7 ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியதால், முடிவு எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

‘ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்க வேண்டும்’ – முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்

இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம்– எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த முடிவு, சட்டமன்ற செயலளரிடம் அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக கடிதமாக வழங்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்