Aran Sei

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் – ஒன்றிய அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்டதின் பின்னணியா?

ணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் அனில் பரப்பிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரைக் கன்னத்தில் அறைவேன் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை  காவல்துறை கைது செய்யவதற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்ந்திருந்த அனில் பரப், அங்கிருந்தவாறே உத்தரவிட்டார். இதுகுறித்த காணொளிகள் இணையத்திலும்  பரவியது.

 

இதுகுறித்து தெரிவித்திருந்த அனில் பரப், குறிப்பிட்ட இந்த வழக்கில் என் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள சிவ சேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், அனில் பரப் மீது சம்மன் எதிர்பார்த்தது தான் என்றும், ஒன்றிய அரசு அதன் வேலையைத் தொடங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதைச் சட்டப் படி எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source: தி வயர்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்