Aran Sei

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த வழக்கறிஞர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – அரசியல் பழிவாங்களா?

Credit: The Hindu

டந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு எதிராக மனுத் தாக்கல் செய்த நாக்பூர் வழக்கறிஞரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

நாக்பூரைச் சேர்ந்த சதீஷ் உகேவின் வீட்டில் காலை 6 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. நில பரிவர்த்தனைகள் தொடர்பாக சோதனைகள் நடைபெற்று வருகிறது.

மும்பை உயர்நீதிமன்றத்தால், இரண்டு முறை கிரிமினல் அவமதிப்பு குற்றச்சட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்டவர். மேலும், 2017 ஆண்டில் வழக்கு ஒன்றில் கிரிமினல் அவமதிப்பு வழக்கிற்காக அவர் டெபாசிட் செய்த 2 லட்ச ரூபாயில் ஒரு லட்ச ரூபாயை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் அபராதமாக விதித்தது.

“நேதாஜி இருந்திருந்தால் பாஜகவின் செயல்பாடுகளை நிச்சயம் எதிர்த்திருப்பார்” – நேதாஜியின் பேரன் சுகதா போஸோடு நேர்காணல்

”சதீஷ் உகேவின் செயல் திட்டமிட்ட, வேண்டுமென்றே, உள்நோக்கம் கொண்ட முயற்சியாக உள்ளது. இது பொதுமக்களின் மதிப்பீட்டில் நீதித்துறையின் மாண்பை குறைக்க கூடியது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2014ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட பட்நாவிஸ், வேட்புமனுவில் அவர் மீது பதியப்பட்டிருந்த இரண்டு கிரிமினல் வழக்குகள்குறித்த தகவலை மறைத்துவிட்டார். இதனால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனுவில் தகவல்களை மறைத்தற்கு  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனையும் விதிக்கப்படலாம் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மது அருந்தக்கூடாது எனும் காந்தியக் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்கள் அல்ல பாவிகள் – பீகார் முதலமைச்சர்

சொராபுதீன் என்கவுண்டர் தொடர்பான விசாரணைக்குத் தலைமை வகித்த நீதிபதி பி.எஸ்.லோயாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில், எதிர் மனுதாரராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சேர்த்திருந்தார்.

Source: The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்