Aran Sei

‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை – அரசின் மிரட்டல் என்று பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சுயாதீன செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக்கின்  நிர்வாகிகளின் வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளாதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூஸ் கிளிக்கின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்யதா, ஆசிரியர் பிரஜால் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள சைதுலாஜாப் அலுவலகத்திலும், சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தி இந்து உறுதிபடுத்தியுள்ளது.

டிராக்டர் பேரணி வன்முறை – காணாமல் போனவர்களை காவல் நிலையங்களில் தேடும் விவசாயிகள்

வெளிநாடுகளில் உள்ள  ‘சந்தேகத்திற்குரிய நிறுவனங்களிடமிருந்து’ நியூஸ் கிளிக் நிதி பெற்றதாக குற்றச்சாட்டின் அடிப்படையில், இச்சோதனை நட்த்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதாக தி க்விண்ட் தெரிவித்துள்ளது.

“காலையிலிருந்து வீட்டில் சோதனை  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். ஒரு ஆவணத்தைத் தேடுவதாக அமலாக்கத்துறையினர் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உள்ளனர்” என்று பிரஜால் தி வயர் –யிடம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களை முடக்குவதற்காக அரசு அமலாக்கத்துறையைக் கொண்டு சோதனை என்கிற பெயரில் மிரட்டுவதாகச் சில ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுயாதீன ஊடகவியலாளர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA)  உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அரசு, தற்போது அமலாக்கத்துறையை பயன்படுத்தியுள்ளது என்று கூறியுள்ள, தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் “இப்படித்தான், சுயாதீன பத்திரிகையாளர்களை அரசு நடத்துகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை மூலம் மோடி அரசு, சோதனை என்கிற பெயரில், ஊடகவியலாளர்களை தாக்குகிறது என்றும், அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக, நியூஸ் கிளிக்கின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்யதா, ஆசிரியர் பிரஜால் ஆகியோயர் வீட்டில் சோதனை நடை பெற்றுள்ளது என்றும் ஊடகவியலாளர் முகமது அலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஊடங்கள்மீதான வன்முறை தொடர்கிறது என்றும், நியூஸ் கிளிக்கின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்யதா, ஆசிரியர் பிரஜால் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளது என்று ஊடகவியலாளர்கள் ஸ்ரீதர் மற்றும் ரிசவ் ராஜ் சிங் தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்