Aran Sei

40 ஆண்டுகளில் முதன்முறையாக நுகர்வோர் செலவு சரிவு – வீழ்ச்சியில் பொருளாதாரம்

credits : the hindu

இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், தேசிய புள்ளியியல் ஆணையத்திடம் 2017-18 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் செலவு கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் எனக் கேட்டிருப்பதாக தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் ” – ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்

நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு மூலம் தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், பொருளாதார தரவிற்கு ஏற்றவாறு அடிப்படை ஆண்டையும் (base year) அமைக்க உதவும். இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஒரு பணிக்குழு இந்த கணக்கெடுப்பை வெளியிட ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த கணக்கெடுப்பில் மிக மோசமான முடிவுகள் தெரிய வந்தததால் அது வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம்: நிச்சயமற்ற நிலையில் மாநிலங்கள்

தேசிய புள்ளியியல் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் பிரச்சினைகள் இருப்பதாக கூறி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிடாமல் தடுத்து நிறுத்தி வைத்த கணக்கெடுப்பில், ”நாற்பது வருடங்களில் முதன்முறையாக நுகர்வோர் செலவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது” என தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு

இந்நிலையில் கணக்கெடுப்பில் கசிந்த தகவல்களின் மூலம், 2011-12 முதல் 2017-18 வரை தனி நபரின் செலவு மாதத்திற்கு 1501 ரூபாயில் இருந்து 1446 ரூபாயாக 3.7 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்திய கிராமங்களில் 8.8 சதவீதம் இருந்த நுகர்வோர் செலவு விகிதம் குறைந்துள்ளது, அதே வருடங்களில் தனிநபர் செலவு 2 சதவீதம் நகரங்களில் அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த 2020 பிப்ரவரி மாதம், இந்த கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படப் போவதில்லை என தேசிய புள்ளியியல் ஆணையம் அறிவித்ததிருந்தது, பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே அரசு இவ்வாறு செயல்பட்டதாக கூறப்பட்டது.

credits : pti
credits : pti

2017-18 ஆண்டின் நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு பொருளாதார ஆய்வுக்கு உதவும் எனும் அடிப்படையிலேயே அது குறித்த தகவலை வெளியிட வேண்டும் என இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் தேசிய புள்ளியியல் ஆணையத்திடம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்