Aran Sei

வீழ்ச்சியடையும் உலக பொருளாதாரம் – தப்பிப்பிழைத்த சீனா

உலகப் பொருளாதாரம் 2020-21-ம் ஆண்டில் 4.4 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற தர நிர்ணய அமைப்பு கணித்துள்ளது.

அண்மையில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்ட உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் உலகப் பொருளாதாரம் 2020-21-ம் ஆண்டில் 4.6 விழுக்காடு சுருங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் பொருளாதாரம் 0.6 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என்றும் சீனாவின் பொருளாதாரம் 2 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என்றும் ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் தர நிர்ணய அமைப்பு தனது குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுக்கு முன்பிருந்த நிலையை எட்டிவிட்டது என்று சீனாவை பற்றி ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் அமெரிக்கப் பொருளாதாரம் இந்த ஆண்டில் மொத்தமாக 4.6 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வளர்ந்துவரும் நாடுகள் பலவகைகளில் நெருக்கடியானப் பொருளாதார சவால்களை சந்திப்பதற்கு அந்நாடுகளில் போதிய அளவுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாதே காரணம் என்றும் அதேபோல், அய்ரோப்பா போன்ற நாடுகளைக் காட்டிலும் பல வளர்ந்துவரும் நாடுகள் மிக மோசமானப் பொருளாதார சுருக்கத்தை காண்கிறது என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டிருக்கும் ஆழமானப் பொருளாதார சுருக்கம் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாக இருக்கிறது என்று பிட்ச் ரேட்டிங்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்