Aran Sei

எரிவாயு பொருட்கள் மூலம் ஈட்டிய 21 லட்சம் கோடி எங்கே? – மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கான வரி  மூலம் மத்திய அரசு 21 லட்சம் கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இந்த அமர்வின் முதல் நாளிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துப் பேச வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட்தால் மாநிலங்களவை நாள் முழுக்க முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது.

“நாங்கள் பெண்கள் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

மேலும், மாநிலங்களவை விதி எண் 267-ன் கீழ், பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. ஆனால், இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுத்துவிட்டார்.

பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே  தீபந்தர் ஹூடா, சையத் நசீர் உசேன் மற்றும் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ”பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு குறித்து மக்களின் கோபத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்த முயன்றோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். ஆனால், அதற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை. அதைக் கேட்கத் தயாராகவும் இல்லை” என்று தெரிவித்த்தாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள்தான் இருக்க வேண்டுமா? – 30 ஆண்டுகால தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய உச்சநீதிமன்றம் விருப்பம்

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை எழுப்புவோம். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேச முயன்றால், அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“21 லட்சம் கோடி பணம் எங்கு சென்றது, எவ்வாறு செலவிடப்பட்டது அல்லது யாருக்கு நன்மை கிடைத்தது என்பது யாருக்கும் தெரியாது. ஒருபுறம் கார்ப்பரேட் மீதான வரிகளை குறைக்கிறீர்கள் . 25 1.25 லட்சம் கோடி வருவாயாக வந்தும், பெண்கள், நடுத்தர வர்க்கம் மற்றும் சாதாரண குடிமக்கள் மீது இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்கள்”  என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் மறைமுக நெருக்கடி நிலை நிலவுகிறது – சிவ சேனா எம்.பி சஞ்சய்ரவுட் கருத்து

கூடுதல் கலால் வரியைத் திரும்பப் பெறுங்கள் என்றும் 2014 ஆண்டு உள்ளது போன்றே வரியைக் கொண்டுவாருங்கள் என்றும்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை நினைவூட்டியுள்ளர்.

விலையேற்றத்திற்கெதிரான முழக்கங்களை நாங்கள் எழுப்பியபோது. அது பாராளுமன்ற நடைமுறைக்கு எதிரானது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சனையைப் பாராளுமன்றத்தில் பேசமுடியவில்லையென்றால் பாராளுமன்ற ஜனநாயகம் எதற்காக என்று உசேன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்