Aran Sei

நான்கில் மூன்று பங்கு கிராமப்புற மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை – ஆய்வு முடிவு

76 %  கிராமப்புற இந்தியர்கள் சத்தான உணவை உட்கொள்வதில்லை என்னும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

‘ஃபுட் பாலிசி’ என்னும் பத்திரிக்கை கிராமப்புறத்தை சேர்ந்த மக்களில் நான்கில் மூன்று பேர் சத்தான உணவை உட்கொள்வதில்லை என்ற ஆய்வு முடிவை வெளியிட்டனர். அவர்களுடைய வருமானம் முழுவதையும் உணவுக்காக செலவழித்தால் கூட பலரால் அரசாங்கத்தின் முதன்மை ஊட்டச்சத்து மையம் வழங்கியிருக்கும் சத்தான உணவுக்கான அடிப்படை அளவுகோலில் வரும் குறைந்தபட்ச விலைலயில் கிடைக்கும் உணவை கூட வாங்க முடியாத நிலையிலே இருக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு வேலை உணவுக்குப்பின் இருக்கும் பொருளாதாரத்தை பற்றி இதற்குமுன் ஆய்வு செய்ததை போன்று அல்லாமல்  இந்த ஆய்வு மிகவும் கவனமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு சமூகத்தில் தற்போது  பெரும்பான்மையாக இருக்கும்  கூலித்தொழில் ஈடுபடும் தினக்கூலிகளின் வருமானம் மற்றும் அவர்களின் உணவுத்தேவையை வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ உணவுசார் பட்டியலின் வழிமுறைகளில் வரும் பால், பழங்கள் மற்றும்  பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை உட்கொள்கிறார்களா என்பதும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

கிராமப்புர இந்தியாவில் சத்தான உணவு பொருட்களை வாங்கும் தன்மை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த பொருளாதார அறிஞர் கல்யாணி ரகுநாதனால் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்விற்கான உணவுப் பொருட்களின் விலை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 2011 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. அதற்கான காரணம், உணவு பாதுகாப்பை அடைந்து விட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் தேசம், ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ளும் பட்டியலில் மிகவும் பரிதாபமான இடத்தையே பிடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உலகளாவிய வறுமை குறியீடு வெளியிட்ட அறிவிப்பில், உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருப்பது இந்தியாவில்தான் என அறிவித்துள்ளது. அதிக கலோரிகள் எடுத்து கொள்வதில் இந்தியா நல்ல நிலையிலேயே உள்ளது ஆனால், அது ஊட்டச்சத்துள்ள பொருட்களாக இருப்பதில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கான தேசிய நிறுவனம் வழங்கியுள்ள வழிமுறைகள் படி வயதிற்கு வந்த ஒரு பெண் 330 கிராம் தானியங்கள்,  75 கிராம் பருப்பு வகைகள்,  300 கிராம் பால்,  100 கிராம் பழங்கள்,  300 கிராம் காய்கறிகள் (அவற்றுள் 100 கிராம் கீரை வகைகளும் அடக்கம்)  உட்கொள்ள வேண்டும் என கூறுகிறது.  அவற்றின் குறைந்தபட்ச விலையிலிருந்து நிர்ணயித்தால் கூட கோதுமை,  அரிசி,  பால்,  பழம்,  வெங்காயம்,  முள்ளங்கி, கீரை,  வாழைப்பழம் போன்றவற்றை கணக்கில் வைத்து அந்த ஆய்வு ஓரு நாளைக்கான உணவின் விலை 45 ருபாய் ஆகும் ( ஆண்களுக்கு 51).

அவர்களுடைய முழு வருமானத்தையும் உணவிற்காக செலவழித்தால் கூட 63.3 % கிராமப்புற மக்களால் அல்லது 52 கோடி இந்தியர்களுக்கு இந்த உணவை வாங்கும் தன்மையில்லை என்றும், அவர்களுடைய வருமானத்தின் மூன்றின் ஒரு பகுதியை உணவிற்கு அல்லாமல் மற்ற இதர செலவுகளுக்கு பயன்படுதினால் 76 % கிராமப்புற இந்தியர்களால் ஒரு நாளுக்கான உணவு பொருளை வாங்க இயலாது  ( 51 ரூபாய் ) என்கிறது ஆய்வு முடிவுகள்.

புள்ளிவிவரங்களில் ஒரு சில மாறுபாடுகள் ஏற்பட்டாலும் கிராமப்புற  இந்தியாவில் எவ்வளவு பெரிய ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை உள்ளது எனவும் ஊட்டச்சத்தான உணவு மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளதாகவும் கிராமப்புற மக்களுக்கு சராசரி  வருமானம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதாகவும் கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.

தேசிய மாதிரி  கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டின் தரவுகளை வைத்தே இந்த ஆய்வுகள் செய்யப்பட்டாலும் அதற்கு பிறகு உணவு பொருட்களுக்கான விலை பன்மடங்கு உயர்ந்துள்ள காரணத்தினால் ஆய்வாளர்கள் அதே போன்று ஒரு திட்டம் மூலம் ஊட்டச்சத்தான உணவு பொருட்களை வாங்கும் மக்களின் வாங்கும் திறனை கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தற்போதைய சூழலில், உணவின் விலை நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக வைத்தே உள்ளது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இதை அடிப்படியாக வைத்து உணவின் விலையை மதிப்பீடு செய்வது தவறான முடிவையே தரும் என்கிறது இந்த ஆய்வு.

நன்றி : தி இந்து

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்